கீதா என் அன்பு குட்டி சகோதரி...பட்டிணத்து மாப்பிள்ளைக்கு மணமுடித்து போனவள். நானும் வெளிமாநிலத்தில் வேலைகிடைத்து திருமணம் குழந்தைகள் என குடும்பஸ்தனாகிவிட்டேன்.
இதோ அப்பாவின் அறுபதாம் கல்யாணத்திற்கு மீண்டும் பிறந்த ஊரில் சந்திக்கப்போகிறோம்.ஒரு நாள் முன்னதாகவே வந்துவிட்டேன் நான்.
என் பால்ய சிநேகிதர்களிடம் உரையாடி மகிழ்ந்துவிட்டு என் மகனுடன் எங்கள் வீட்டு கொல்லைப்புறத்தில் சற்று விளையாடியபோது,நானும் என் குட்டி தங்கையும் அடித்த கொட்டங்கள் மனதில் எட்டி பார்த்தன.
பூவரசன் இலை பறித்து அவள் நாதஸ்வரம் வாசிக்க...பழைய பிளாஸ்டிக் வாளியில் நான் தவிலடித்தது, தோட்டத்தில் பாத்திக்கட்டி நீரூற்றி செடி வளர்த்தது, கிணற்றில் போட்டுவிட்ட வாளியை எடுக்க பாதாள கொலுசு போட்டு இரவு வரை தேடியது..
கீழே விழும் தேங்காய் குரும்பிகளை சேகரித்து வைத்தது.... .நினைக்கவே சிரிப்பும் ஏக்கமுமாக இருந்தது.
என் தங்கையை எதிர்பார்த்து காத்திருந்தேன்.
வாசலில் "குட்டிம்மா வந்தாச்சு"அப்பாவின் குரல் ஒலிக்க ஆவலாய் ஓடினேன் மகனை தூக்கிக்கொண்டு...
கையில் இருந்த தன் குழந்தையை அம்மாவிடம் கொடுத்தவாறே
"அம்மா அவருக்கு ரொம்ப பசி ஏதாவது சாப்பிட இருக்கா?"
அவசரமாக சமையலறை ஓடிய குட்டிம்மாவை தொடர்ந்து ஓடினாள் அம்மா.
"வாங்க மாப்பிள்ளை சௌக்கியமா?" விசாரித்துக்கொண்டே மின்விசிறியை அதிகப்படுத்தின அப்பா....
"மோகன் மாப்பிள்ளைக்கு வாழை இலை அறுத்துவா " என்றவுடன்
கொல்லைப்புறம் ஓடியவனுக்கு....
"அண்ணி , அவருக்கு உப்புமா பிடிக்காது அண்ணி நான் இட்லி வைக்கிறேன் சாம்பார் இருக்கா? இல்லைனா கொஞ்சம் சட்னி அரைக்கவா?"
சமையலறையில் தங்கையின் வார்த்தைகள் தெளிவாக கேட்டு
மேலும் பரபரப்பை மனதில் ஏற்படுத்த வேகமாக வாழையிலை அறுக்கும்போது... அருகிலிருந்த பூவரச மரம் என்னை ஏக்கமாக பார்ப்பதுபோல் தோன்றியது.

No comments:
Post a Comment